முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா 
செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

மாலை மலர்

சென்னை:

அரக்கோணம் தொகுதி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன். பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா.

உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்த அனுசுயா குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அனுசுயா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68.

அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஆர்.காந்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அங்கிருந்த ஜெகத்ரட்சகனுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அனுசுயாவின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. அடையாறில் உள்ள வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.