அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக-வில் இணைந்தார் 
செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக-வில் இணைந்தார்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் வெற்றிபெற்றார்.

மாலை மலர்

சென்னை:

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிமுக நிர்வாகிகள் உள்பட 900 பேருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

இதையும் படியுங்கள்...குழந்தைகள் பாதுகாப்புக்கு புகார் தெரிவிக்க 8 உதவி எண்கள்- சென்னை கலெக்டர் அறிவிப்பு