அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 
செய்திகள்

அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரித்து செல்கின்றது.

அரவக்குறிச்சி:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து சுமார் 7450 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதுமட்டுமல்லாது ஆங்காங்கே நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னறிவிப்பு செய்திருந்தார்.

இந்நிலையில் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரித்து செல்கின்றது. அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணை பகுதியில் யாரையும் விடாதவாறு அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.