பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 43). தனியார் கல்லூரி பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் கல்லூரி பஸ்சை ஓட்டிச்சென்றார். பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரி அருகே சென்றபோது முன்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் பெரம்பலூர் இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வசந்தகுமார் (23), மாணிக்கம்(23), தேவதாசன்(20) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் ஆகிய 5 பேர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர்.
இதனால் பஸ் டிரைவர் ரகுவுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து பஸ் டிரைவர் ரகுவை தாக்கியதில், அவர் காயமடைந்தார். இது தொடர்பாக ரகு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார், மாணிக்கம், தேவதாசன், 2 சிறுவர்கள் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.