மீன் 
செய்திகள்

சென்னையில் மீன் விலை திடீர் அதிகரிப்பு

வரத்து குறைவே மீன் விலை உயர்வுக்கு காரணம் என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ராயபுரம்:

சென்னையில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இவை வானகரம், புழல் காவாங்கரை, மீன் சந்தைகளில் விற்பனை ஆகிறது.

இந்த நிலையில் மீன்கள் வரத்து குறைவால் காசிமேடு, வானகரம், காவாங்கரை மீன் சந்தைகளில் கடந்த 2 நாட்களாக மீன்விலை அதிகரித்து உள்ளது.

காசிமேடு மீன் மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ 600-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது.

இதே போல வவ்வால், நண்டு, இறால், கொடுவா மீன்களும் வழக்கமான விலையை விட ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்து உள்ளது. மீன் விலை கிலோவில் வருமாறு:-

விலை உயர்ந்து இருந்தாலும் மீன் பிரியர்கள் மீன்களை வழக்கம் போல் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவே மீன் விலை உயர்வுக்கு காரணம் என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT