தென்னந்தோப்பில் தீவிபத்து 
செய்திகள்

தென்னந்தோப்பில் தீவிபத்து - 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் தென்னை மரத்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்:

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் மலையப்பசாமி என்பவரது தென்னை மரத்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஏக்கரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

தோப்பில் தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது காற்றின் வேகம் அதிகமானதால் தீ பரவல் அதிகரித்தது.

இந்நிலையில், அவர்கள் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.