தீ விபத்து 
செய்திகள்

வல்லத்தில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்

வல்லத்தில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சை அடுத்துள்ள வல்லத்தில் இருந்து திருக்கானூர்பட்டி செல்லும் சாலை வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). விவசாய கூலி தொழிலாளி.

இந்தநிலையில் நேற்று மின்கசிவு காரணமாக திடீரென இவரது குடிசை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. ரூ. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் வந்து முருகேசன் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வழங்கினர்.