சேலம்:
சேலம் செட்டிச்சாவடி என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 50).
இவர் சேலம் மத்திய நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. 3-வது மகள் ஹரிஷ்கா (20) வுக்கு சற்று மனநிலை குறைபாடு இருந்தது. இதனால் தியாகராஜன் மன வேதனையில் தவித்தார்.
இதையடுத்து மகளுடன் தற்கொலை செய்து கொள்ள தியாகராஜன் முடிவு செய்தார். அதன்படி முதலில் ஹரிஷ்காவுக்கு விஷத்தை கொடுத்த அவர் தானும் விஷத்தை குடித்து விட்டு தூங்கினார். நேற்று முன்தினம் வெகுநேரம் ஆகியும் 2 பேரும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தியாகராஜனை எழுப்ப முயன்றனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த தியாகராஜன், ஹரிஷ்காவுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிஷ்கா உயிரிழந்தார். தொடர்ந்து தியாகராஜனுக்கு தீவிர சிக்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரணை நடத்திய கன்னங்குறிச்சி போலீசார் தியாகராஜன் மீது கொலை மற்றும் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறார்கள்.