கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கணபதி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது 50), தீராத வயிற்று வலியால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.