கோப்புப்படம் 
செய்திகள்

ஏர்வாடி அருகே விவசாயி மீது தாக்குதல்- போலீசார் விசாரணை

ஏர்வாடி அருகே விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடியை சேர்ந்தவர் முருகன் (60), விவசாயி. இவருக்கு சொந்தமான விளை நிலங்கள் பொன்னாக்குறிச்சி குளத்தின் அருகே உள்ளது.

சம்பவத்தன்று மாலை முருகன் குளத்தின் தண்ணீரை தனது விளை நிலத்திற்கு பாய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புளியங்காட்டை சேர்ந்த மகேஷ், முருகனின் விளைநிலத்திற்கு சென்ற தண்ணீரை அடைத்து தனது விளைநிலத்திற்கு திருப்பி பாய்த்தார்.

இதை முருகன் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் முருகனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி ஏர்வாடி போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT