முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு கொரோனா பரிசோதனை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவி செய்து உடன் இருந்த இருவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நடிகை சாந்தினி அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இன்று பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவரை அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

மேலும் மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவி செய்து உடன் இருந்த இருவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT