விபத்து பலி 
செய்திகள்

ஏரியூர் அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

ஏரியூர் அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று மாலை நெருப்பூரில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது நெருப்பூரில் உள்ள சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மொபட் மோதியது. இதில் சரவணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.