விபத்து 
செய்திகள்

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் சதீஷ்குமார் (வயது 24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் தற்போது அவரது தந்தைக்கு துணையாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கிடங்கன்பாண்டலத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். குளத்தூர் ஏரி அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT