கோப்பு படம். 
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரிஷிபாலன் (வயது22). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் திருத்துறைப்பூண்டி அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கதவு அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எந்திரம் மூலம் துளை போட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரிஷிபாலன் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரிஷிபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானது திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT