மின்சாரம் 
செய்திகள்

தமிழகம் முழுவதும் மழை நீடிப்பு- மின் தேவை 12 ஆயிரத்து 731 மெகா வாட்டாக சரிந்தது

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயம் உள்பட பல்வேறு தேவைகளுக்கான மின் தேவை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர்:

தமிழக மின் தேவை கடந்த 4-ந் தேதி 14 ஆயிரத்து 416 மெகாவாட்டாக இருந்தது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக விவசாயம் உள்பட பல்வேறு தேவைகளுக்கான மின் தேவை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மின் தேவையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

5-ந் தேதி 13 ஆயிரத்து 855 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நேற்று 12 ஆயிரத்து 731 மெகாவாட்டாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் மின் தேவை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.