கோப்பு படம் 
செய்திகள்

தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 24 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.