கோப்புபடம் 
செய்திகள்

விருதுநகர் அருகே புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த முதியவர் கைது

விருதுநகர் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 72 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் அருகே ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி (வயது 75) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 72 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தார். 

போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன் கோபால்சாமியை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.