முட்டை 
செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ரூ 3.80 ஆக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ 3.80 ஆக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.