முட்டை 
செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு 390 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 380 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 390 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-405, ஐதராபாத்-356, விஜயவாடா-381, மைசூரு-400, மும்பை-415, பெங்களூரு-395, கொல்கத்தா-438, டெல்லி-390.

கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் முட்டைக்கோழி கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது.

பங்குனி உத்திர விரதம் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் முட்டை விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி சற்று குறைந்து உள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT