எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

சேலத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பயணம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம்:

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 23-ந் தேதி சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி சேலத்தில் தங்கியிருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இன்று மாலை மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) சென்னையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை சென்னையில் நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்வார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT