சென்னை:
தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இன்று வெளியாகியிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில்,
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுவதாக கூறியுள்ளார்.