முருங்கைக்காய் 
செய்திகள்

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு

முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து நேற்று மொத்த விலை மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உற்பத்தி அதிக அளவில் இருந்ததால் 2-ந் தேதி முருங்கைக்காய் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு உணவாக வழங்கினர்.

இந்த நிலையில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து நேற்று மொத்த விலை மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.