கைது 
செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் மகேஷ்கண்ணா. இவருடைய மகன் வினோத்கண்ணா(வயது21). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வாாத்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மாணவியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்கண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT