நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 26). இவருக்கும், சேலம் டாக்டர் காலனியை சேர்ந்த திருவேங்கடம் மகன் பிரசன்னா (29) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் பணம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பவித்ராவை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவுப்படி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், பிரசன்னா, அவருடைய தந்தை திருவேங்கடம் (55), தாய் வாசுகி (50) மற்றும் சகோதரர் நவநீதகிருஷ்ணன் (24) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.