ஒவ்வொரு வருடமும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சனைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகள் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைகள் மக்களுக்கு தெரியும் விதமாக திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. இதில் நோயாளிகள், மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் வசந்தி, டாக்டர் ஜெய ஶ்ரீ, டாக்டர் மனோஜ் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கினார்கள். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.