முட்டை கோஸ் 
செய்திகள்

இதை சாப்பிட்டால் கொரோனா பரவுமா? வைரலாகும் பகீர் தகவல்

கொரோனா பாதிப்பு இந்த காய்கறி மூலம் பரவும் என உலக சுகாதார மையம் தெரிவித்ததாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

முட்டை கோஸ் மூலம் கொரோனாவைரஸ் பரவும் என உலக சுகாதா மையம் தெரிவித்ததாக கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் மக்கள் யாரும் முட்டை கோஸ் சாப்பிட வேண்டாம்.  

கொரோனாவைரஸ் முட்டை கோசில் அதிக நேரம் இருக்கும். முட்டை கோசின் மீது கொரோனாவைரஸ் 30 மணி நேரங்களுக்கும் அதிகமாக இடம்பெற்று இருக்கிறது. இந்த தகவலை உலக சுகாதார மையம் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உலக சுகாதார மையத்தின் இந்திய அதிகாரி, வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிவித்தார். ஐநா அமைப்பு இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் இடம்பெறவில்லை.

அந்த வகையில், முட்டை கோஸ் மூலம் கொரோனாவைரஸ் பரவுவதாக கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

SCROLL FOR NEXT