குறிப்பாக, அதிமுக - திமுக இடையே தினமும் கருத்துமோதல் ஏற்பட்டு வருகிறது. இரு கட்சிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், திமுகதலைவர் முக ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் @CMOTamilNadu (தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி) முகமூடியை @timesofindia (டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்) கழற்றி வீசியிருக்கிறது.
அறிவிக்கப்பட்டவற்றில் முதலீடாகப் பெற்றது வெறும் 9.4%
வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது! மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?
என பதிவிட்டுள்ளார்.