சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர்
அப்போது அவர் கூறியதாவது;-
“அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.