தற்கொலை 
செய்திகள்

பெற்றோர் இடையே தகராறு- சிறுமி தற்கொலை

ராமநாதபுரம் அருகே பெற்றோர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பல்லாக்குகார தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் சினேகா (வயது14) .9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சினேகாவின் தாய் கீதாவிற்கும், தந்தை ஜீவானந்ததுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா, நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT