கைது 
செய்திகள்

திண்டுக்கல் அருகே மது விற்றவர் கைது

திண்டுக்கல் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் தலைமையில் போலீசார் நேற்று பாலமரத்துபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபானம் விற்ற வாழைக்காய்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.