கைது 
செய்திகள்

தர்மபுரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

தர்மபுரி அருகே மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி பகுதியில் தர்மபுரி டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரியின் டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT