தற்கொலை 
செய்திகள்

தர்மபுரியில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தர்மபுரியில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 34). பிளாஸ்டிக் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் கடன் தொல்லை காரணமாக வீரமணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.