கைது 
செய்திகள்

தர்மபுரி அருகே சாராயம் விற்ற பெண் கைது

தர்மபுரி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தோல்தூக்கி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது கவிதா (வயது 40) என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT