மரணம் 
செய்திகள்

தேவகோட்டை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

தேவகோட்டை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள எழுவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டு இருக்கும் போது அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.