சேலம்:
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தனக்கோட்டி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகர பகுதிகளுக்கு விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தி முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.