மந்திரி சத்யேந்தர் ஜெயின் 
செய்திகள்

கொரோனாவுக்கு ஊரடங்கினால் தீர்வு ஏற்படாது - சத்யேந்தர் ஜெயின்

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப்போல தலைநகர் டெல்லியிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி:

தலைநகர்டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள், ஊரடங்கு தீர்வு ஆகாது என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவுக்கு எதிராக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தினால் இந்த வைரஸ் சாகும் என நிபுணர்கள் பரிந்துரைத்தனர். அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் வைரஸ் சாகவில்லை. எனவே கொரோனாவுக்கு ஊரடங்கினால் தீர்வு ஏற்படும் என நான் நினைக்கவில்லை.

எனவே டெல்லியில் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை. கொரோனா நோயாளிகளுக்கு போதுமான அளவு ஆஸ்பத்திரி படுக்கைகள் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் அது மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.