மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் - சம்யுக்தா ஆதித்தன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு

மாலைமலர் நாளிதழ் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் - சம்யுக்தா ஆதித்தன் தம்பதியர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை:

தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தனது குடும்பத்தினருடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். 

மாலைமலர் நாளிதழ் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் - சம்யுக்தா ஆதித்தன் தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி தம்பதி இருவரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த நிகழ்வில் தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் உடனிருந்தார். திருமணமான தம்பதிக்கு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT