கோப்பு படம். 
செய்திகள்

செங்கல்பட்டில் மின்சாரம் தாக்கி மாடு பலி

செங்கல்பட்டில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

மாலை மலர்

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கால்வாய் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 60), இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கேசவன் மேய்ச்சலுக்காக தனது எருமை மாடுகளை ஓட்டிச் சென்றார். பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டி கொண்டு வரும்போது பாண்டூர் அருகே அறுந்து கிடந்த மின்சார வயரை எருமை மாடு ஒன்று மிதித்தது.

இதில் மின்சாரம் தாக்கி மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. 

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.