போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா 2-வது அலை குறித்து, முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று காணொலி வாயிலாக நடத்திய கூட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது, ஏழை மக்கள் அடிக்கடி ரேசன் கடைகளுக்கு செல்வதைத் தடுக்க அவர்களுக்கு 3 மாத காலத்துக்கான உணவு தானியம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
அத்துடன், உயிர் காக்கும் மருந்துகளை கருப்புச் சந்தையில் விற்க முயலுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.