ககன்தீப் சிங் 
செய்திகள்

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை காவல் ஆணையர் உடனான ஆலோசனைக்கு பின் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.