சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 
செய்திகள்

கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்- சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.

மாலை மலர்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.

* தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

* கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்.

* கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு பயன்படும்.

* தொற்று அளவு, மக்கள் தொகையை கணக்கில் வைத்து தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஜூன் மாதம் இறுதிக்குள் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.