கொரோனா வைரஸ் 
செய்திகள்

சிவகங்கையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 6,665 ஆக அதிகரித்துள்ளது.

மாலை மலர்

சிவகங்கை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,665 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.