கொரோனா பரிசோதனை 
செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக சரிவு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நாடு முழுவதும் இதுவரை 45.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுளது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 120, கேரளாவில் 122 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்ற 483 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,19,470 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,31,038, கர்நாடகாவில் 36,293, தமிழ்நாட்டில் 33,838, டெல்லியில் 25,040, உத்தரபிரதேசத்தில் 22,743 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 38,740 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம்அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயி ரத்து 79 ஆக உயர்ந்தது.

தற்போதைய நிலவரப்படி 4,05,513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நாடு முழுவதும் இதுவரை 45.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுளது.

இதில் நேற்று மட்டும் 16,68,561 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... பிளஸ்-2 தனித்தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம்