கோப்பு படம். 
செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா- சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளின் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் தினமும் 100-க்கும் குறைவாகவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 63 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.