கைது 
செய்திகள்

தூத்துக்குடியில் சமையல் தொழிலாளி கொலை- நண்பர்கள் கைது

தூத்துக்குடியில் சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சண்முகபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). சமையல் தொழிலாளி.

தூத்துக்குடி டுவிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (50), ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் கணேசன். இவர்கள் இருவரும் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான மாரியப்பன், வேலுச்சாமி, கணேசன் ஆகியார் தினமும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.

இந்நிலையில் அண்ணா நகர் மெயின் ரோட்டில் நேற்று நள்ளிரவு 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் சேர்ந்து கற்கள் மற்றும் கம்பால் மாரியப்பனை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை வேலுச்சாமி மற்றும் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT