சேலம்:
சேலம் கடத்தூர் பகுதியில் ரூ.96 கோடியே 54 லட்சத்தில் அரசு சட்டக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணியை கலெக்டர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சங்ககிரியில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலக கட்டுமானப்பணியையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், உதவி கலெக்டர் பிரதாப்சிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடாசலம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.