புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலம், பதேஹ்கார் தொகுதியில் இருந்து மக்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், டாக்டர் அமர்சிங் (வயது 67).
இவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவில், உடல்நிலை பாதித்தது. டெல்லியில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக இன்று (சனிக்கிழமை) சோதனை அறிக்கை வந்துள்ளது. நான் டெல்லி இல்லத்தில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என கூறி உள்ளார்.