கோப்புபடம் 
செய்திகள்

மும்பை, தானேயில் நாளை கல்லூரிகள் திறப்பு இல்லை: மும்பை மாநகராட்சி

மும்பை மற்றும் தானேயில் நாளை கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

மராட்டியத்தில் நாளை (திங்கட்கிழைமை) முதல் கல்லூரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் மும்பையில் கல்லூரிகளை திறக்க மாநகராட்சி அனுமதி மறுத்து உள்ளது.

இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி, மும்பை பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் மும்பையில் கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து கல்லூரிகளை திறப்பது குறித்து வருகிற 22-ந் தேதி முடிவு செய்வோம் என மாநகராட்சி கூறியுள்ளது. மும்பையில் பள்ளிகளை திறக்கவும் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தானே, நவிமும்பையிலும் நாளை கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதுகுறித்து தானே மாவட்ட கலெக்டர் ராஜேஸ் நர்வேகர் கூறுகையில், " கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்டத்தில் உள்ள 6 மாநகராட்சி நிர்வாகங்களிடம் கருத்து கேட்டு வருகிறோம்" என்றார்.

எனினும் மும்பையையொட்டி உள்ள ராய்காட், பால்கர் மாவட்டத்தில் நாளை முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாக்பூர், புனேயிலும் கல்லூரிகளை திறக்க உள்ளாட்சி அமைப்புகள் பல்கலைக்கழகங் களுக்கு அனுமதி வழங்கி உள்ளன.