தற்கொலை 
செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை- தந்தை புகார்

தாய், தந்தை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

சிவகாசி:

திருத்தங்கலை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரும் இவரது மனைவி அனிதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்தநிலையில் மகன் அஷ்வின் (வயது 18). ஆரோக்கியசாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அஷ்வின் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதல் ஆண்டு படித்து வந்தார். 

இந்தநிலையில் தாய், தந்தை பிரிந்து வாழ்ந்து வந்ததை தொடர்ந்து மனஉளைச்சல் அடைந்த கல்லூரி மாணவர் அஷ்வின் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.