தற்கொலை 
செய்திகள்

காதலியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் தற்கொலை

கோவையில் திருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர். இவர் மலுமச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவர் அங்கு சென்றார். அப்போது 2 பேரும் ஜாலியாக இருந்தனர். இதில் மாணவி 7 மாத கர்ப்பமானார்.

இந்த விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று தங்களது மகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் மாணவி தன்னுடன் படிக்கு மாணவர்தான் என்று கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் மாணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களது மகள் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், என்ன முடிவு செய்ய போகிறீர்கள் ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்டனர்.

இதனால் பயந்து போன மாணவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.